ONUR TOT Training

உளசமூகப் பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சிநெறி
பதவி வெற்றிடம் – 25

விண்ணப்ப முடிவுத்திகதி : 01.06.2018

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு, மாவட்ட செயலகங்கள் (வடமாகாணம்) மற்றும் சாந்திகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான உளநல, உளசமூக சேவைகளை வழங்க முன்வந்துள்ளன. அதன் ஒரு அம்சமாக உளசமூகத் துறையில் பயிற்சியாளர்களை உருவாக்கி அவர்கஊடாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் பணியாற்றும் அரச, அரசசார்பற்ற மற்றும் கிராமமட்ட பொது அமைப்பினரைப் பயிற்றுவிப்பதையும் பாதிக்கப்பட்ட மக்களைத் உளசமூக ஆதரவினை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இவ்விண்ணப்பம் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் ஏற்கனவே கோரப்பட்டது (2017 ஐப்பசி மாதம்). திரும்பவும் விண்ணப்பிக்க சந்தர்பம் கொடுக்கப்படுது. முன்னர் விண்ணப்பித்தவர்கள் திரும்பவும் விண்ணப்பிக்க தேவையில்லை.

இத்திட்டத்திற்குத் தெரிவுசெய்யப்படுபவர்கள் இரண்டு மாதகாலப் பயிற்சியைத் தொடர்ந்து தத்தமது பிரதேசங்களில் பணியாற்றத் தொடங்குவார்கள்.

திட்டக் காலப்பகுதி : 1 வருடம் உத்தேசிக்கப்பட்டுள்ளது

தகைமைகள்

  • உளவியல், சமூகவியல், மானுடவியல், மெய்யியல், விஞ்ஞானம், மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் இளங்கலைமாணிப்பட்டம் பெற்றிருத்தல்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அல்லது கல்வி நிறுவனம் ஒன்றில் மேற்படி துறையில் டிப்ளோமாவுடன் குறைந்தது பல வருடங்களாவது வேலை செய்த அனுபவத்தைப் பெற்றிருத்தல்.
  • உளசமூகத் துறையில் பல வருடங்களாவது திறமையாக வேலை செய்த அனுபவத்தைப் பெற்றிருத்தல்.
  • கணினி அறிவு முக்கியமானது.
  • ஆங்கிலத்தில் திறமையுள்ளவர்களாக இருப்பது அவசியமானது.
  • சிறந்த தொடர்பாடல் திறனும் ஏனையவர்களைக் கற்பிப்பதில் சுய ஆர்வமும் விருப்பமும், சமூக செவை மனப்பான்மை, கொண்டவராக இருத்தல்.

மேற்படி தகைமை உள்ளவர்கள்; தங்களைப் பற்றிய தகவல் பெறக்கூடிய, உறவினரல்லாத மூவரின் பெயரைக் குறிப்பிட்டுத் தங்களுடைய சுயவிபரக்கோவையை பின்வரும் முகவரிக்கு அல்லது மின்னஞ் சலுக்கு அனுப்பி வைக்கவும்.

குறிப்பு: சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கப் பெண்கள், வடக்கு மகாணத்தில் வசிப்பவர்கள் மற்றும் பல இன, மத, மொழி, சாதி, மலயக பின்னணியை கொண்டவர்கள் அதிகம் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்ப முடிவுத்திகதி : 01.06.2018

அனுப்பவேண்டிய முகவரி:

இணைப்பாளர் – வடமாகாணம்,
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு,
சாந்திகம்,
8, கற்பக விநாயகர் ஒழுங்கை,
கச்சேரி நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.

தொலைபேசி இல.: 021-3004904, 021-2223338

மின்னஞ்சல் முகவரி: onur.shanthiham@gmail.com